சாய் சுதர்சனும், நானும் தப்பு பண்ணிட்டோம்.. அதுதான் தெ.ஆ அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – கே.எல் ராகுல் வருத்தம்

KL-Rahul
- Advertisement -

கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேலையில் இந்திய அணி அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 42.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் டாசில் வெற்றி பெற்றிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு அவ்வளவு சாதகமாக இல்லை. கடினமான இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது.

- Advertisement -

ஆனாலும் நானும், சாய் சுதர்சனம் அரைசதம் அடித்து நன்றாக செட் ஆகியிருந்ததால் நாங்கள் ஒரு பெரிய செஞ்சுரி அடித்திருந்தால் நிச்சயம் இன்னும் கூடுதலாக 50 முதல் 60 ரன்கள் வரை கிடைத்திருக்கும். ஆனால் அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் எங்களுக்கு ஒரு நல்ல பாடம் கிடைத்திருக்கிறது. ஒருவேளை 240 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.

இதையும் படிங்க : அவங்க பேச்சை பொய்யாகிட்டேன்.. இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது.. ஆட்டநாயகன் ஜோர்சி பேட்டி

ஆனால் இந்த போட்டியில் சீரான இடைவெளியில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டை விட்டதால் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை. இது போன்ற தவறுகளை திருத்திக் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். நிச்சயம் அடுத்த போட்டியில் மைதானத்தின் தன்மையை கணித்து அதற்கான திட்டத்துடன் களமிறங்குவோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement