இந்த ஒரு விஷயத்துல ஏற்பட்ட மாற்றம் தான் எங்களுக்கு தோல்வியை தந்தது – கே.எல் ராகுல் வெளிப்படை

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 50 வது லீக் போட்டியில் நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே. எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

KXIPvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 63 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர் என 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் 46 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி

17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 45 ரன்களும் குவித்தனர். இறுதி நேரத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 31 ரன்களையும், பட்லர் ஆட்டமிழக்காமல் 22 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Smith

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : டாசை இழந்தது போட்டியில் பெரிய மாற்றத்தை கொடுத்தது. இருப்பினும் பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸ் இன் போது டியூ இருந்ததால் பந்துவீச்சாளர்கள் பந்தினை கிரிப் செய்து வீச முடியவில்லை. இது எதிரணிக்கு ஒரு சவாலான விடயமாக அமைந்தது.

- Advertisement -

மேலும் 2 ஸ்பின்னர்களை வைத்து அணிகள் விளையாடும் போது இரண்டாவது பந்துவீச்சில் டியூ இருந்தால் இதுபோன்ற போட்டிகளில் கடினமான சூழ்நிலை ஏற்படும். இந்த சீசனில் டியூ கணிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதற்காக நாம் எதையும் தயார் செய்ய முடியாது அதனால் அதோடு அடாப் செய்து பழகிக் கொள்ள வேண்டும்.

Gayle-1

கிறிஸ் கெயில் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் கிடைக்கும் புள்ளிகளுக்காக நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். இந்த போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு நாங்கள் அடுத்த போட்டியில் பலமாக திரும்பி வருவோம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement