இவரோட இன்னிங்ஸ் பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது. பயமின்றி துணிச்சலாக விளையாடினார் – கே.எல் ராகுல் பாராட்டு

rahul

நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்த நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 221 ரன்கள் அடிக்க, 222 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை இரு அணிகளுக்கும் சம வாய்ப்போடு சென்றதால் போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

rrvspbks

இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில் : நான் எப்பொழுதும் எங்கள் அணியின் வீரர்களை நம்புவதை நிறுத்துவதில்லை. நிச்சயம் எங்களுக்கு தெரியும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் நாங்கள் ஆட்டத்திற்கு திரும்பி விடுவோம் என்று நினைத்தேன். முதல் 11 – 12 ஓவர்கள் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம்.

அதன்பிறகு போட்டி டைட்டாக சென்றது. இறுதியில் நாங்கள் ஒரு அணியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்களும் சரி பந்து வீச்சாளர்களும் சரி தேவையான நேரத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். எங்கள் அணியில் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாங்கள் அணியில் தேர்வு செய்து விளையாட வைத்து வருகிறோம்.

Hooda-2

இந்த போட்டியில் தீபக் ஹூடாவின் இன்னிங்ஸ் அற்புதமான ஒன்றாக இருந்தது. இதுபோன்ற பயமற்ற ஆட்டத்தை பார்க்கவே விரும்புகிறேன். ஐபிஎல் தொடரும் இதுபோன்ற பயமற்ற இன்னிங்ஸ்களுக்கான ஒரு தொடர் தான். இந்த போட்டியில் கெயில் மற்றும் ஹூடா ஆகியோர் விளையாடிய விதம் அதனை வெளிக்காட்டியது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே எங்களுக்கு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

- Advertisement -

hooda 1

இதனை நாங்கள் அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணி பெற்ற இந்தத் த்ரில் வெற்றிக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சில ரசிகர்கள் பெயர் மாற்றம் வந்த பிறகு அணிக்கு அதிர்ஷ்டம் வந்திருக்கிறது. போட்டியும் வெற்றியில் முடிந்திருக்கிறது இனிவரும் போட்டிகளிலும் பஞ்சாப் அணி வெற்றி பெறும் என தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.