KL Ragul : என்னுடைய இந்த மனநிலையே என்னை சதமடிக்க தூண்டியது – ராகுல் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்

Rahul kl
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

Pollard

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் முதல் 41 பந்துகளில் அரைசதம் அடித்த ராகுல் பிறகு அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் சதம் அடித்தார். இந்த சதம் குறித்து ராகுல் பேசுகையில் : நானும் கெயிலும் பேட்டிங் செய்ய இறங்கியபோது நன்றாக கிரிக்கெட் ஷாட்களை மட்டும் ஆடுவோம். அதிரடியாக ஆடவேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி நல்ல ஷாட்டால் ரன்கள் விரைவாக வந்தது.

Rahul 1

மேலும், கெயில் அவுட் ஆகி செல்லும்போது கடைசிவரை களத்தில் நின்றால் நம்மால் பெரிய அளவிலான ரன்களை குவிக்கமுடியும் என்று என மனதிற்குள் கூறிக்கொண்டு தைரியமாக ஆடினேன். எனது இந்த மனவலிமையை என்னை சதமடிக்க தூண்டியது என்று ராகுல் கூறினார்.

Advertisement