முக்கியமான போட்டியில் இறங்கி இவர் நிச்சயம் அதிரடியில் அசத்துவார் – கே.எல் ராகுல் பேட்டி

Rahul

ஐபிஎல் தொடர் தற்போது துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றது. 8 போட்டிகள் முடிவடைந்துவிட்டது.  இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்முறை இளம் கேப்டனாக ராகுல் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.. மேலும் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே செயல்ப்பட்டு வருகிறார்.

kxip

இருவரும் சேர்ந்து அனியில் மிகப்பெரிய பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வருடம் எப்படியாவது கோப்பையை கைப்பற்ற விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றனர். அணி புதிய கட்டமைப்பு இருக்கிறது அவர்களது ஆட்டத்திலும் இந்த அணுகுமுறையை தெரிகிறது.
கிங்ஸ் பஞ்சாப் அணியின் ஆட்டமும் தலைமைப்பண்பும் மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கிறது.

ஏனெனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி லீக் போட்டிகளை ஆடத்துவங்கிய உள்ள நிலையில் தற்போது வரை அந்த அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை துவக்க வீரராக களம் இருக்கவில்லை.

Gayle

அணியில் அவர் தற்போது வரை ஏன் களமிறங்கவில்லை. இப்படி ஒரு டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரரை களமிறக்காதது ஏன் ? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதே கேள்வியை செய்தியாளர்களும் அவரிடம் கேட்டனர். அதற்கு கே எல் ராகுல் தெளிவாக பதில் கூறினார்.

- Advertisement -

Gayle

அவர் கூறுகையில் “கிறிஸ் கேல் போன்ற வீரரை வெளியில் உட்கார வைப்பதே கடினமான முடிவுதான். இருப்பினும் தற்போது அணித்தேர்வு இப்படி அமைந்தாலும் சரியான நேரத்தில் அவரை களமிறங்க வைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார் கேஎல் ராகுல். அப்படிப் பார்த்தால் அடுத்த சில போட்டிகளிலும் கிறிஸ் கெய்ல் களம் இறங்க மாட்டார் என்று வெட்ட வெளிச்சமாக தெரியவந்திருக்கிறது.