223 ரன்கள் குவித்தும் நாங்கள் மோசமான தோல்வியை அடைய இதுவே காரணம் – ராகுல் வருத்தம்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தால் 223 ரன்களை குவித்தது.

rrvskxip

அதிகபட்சமாக தொடக்க வீரர் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் குவித்தனர். அடுத்து 224 ரன்கள் எடுத்தால் சாதனை வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்து வரலாற்று வெற்றி பெற்றது.

- Advertisement -

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களையும், ராகுல் திவாதியா 31 பந்துகளில் 53 ரன்களையும் குறித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மூன்று பந்துகளில் மிச்சம் வைத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றது.

smith

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேட்டியளித்த பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறியதாவது : t20 கிரிக்கெட்டை இது போன்ற பல விடயங்களை நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். இந்த போட்டியில் நாங்கள் அனைத்தையும் சரியாகவே செய்தோம். எங்களது ஆட்டத்தில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. நல்ல விதமாகவே முதல் இன்னிங்சை ஆடினோம். சொல்லப் போனால் முதலில் ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது என்று நினைத்தோம். ஆனால் இறுதியில் அதை நாங்களே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் கொடுத்து விட்டோம்.

- Advertisement -

உண்மையாக சொல்லப்போனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி ஓவர்களில் ஆடிய ஆட்டம் எங்களது பவுலர்களை மிகுந்த அழுத்தத்திற்கு கொண்டு சென்றது. அதனாலேயே அவர்கள் தவறு செய்தனர். கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டி எங்களுக்கு ஒரு மோசமான போட்டியாக அமைந்தது. இருப்பினும் இது தொடரின் ஆரம்பத்திலேயே இத்தோல்வி நடைபெற்றுள்ளது சற்று நிம்மதி அளிக்கிறது.

rr

இதுபோன்ற ஆட்டங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே அமைகிறது. ஏனெனில் இதுபோன்ற சிறிய மைதானங்களில் எவ்வளவு ரன்கள் அடித்தால் போதாது. மேலும் எங்களது பந்து வீச்சாளர்கள் இன்னும் நிறைய செயல்பட வேண்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் ராகுல் திவாதியா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். அவர்கள் இந்த வெற்றிக்கு பொருத்தமானவர்கள் என்று ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement