2016-ல் நடந்த அந்த ஒரு தோல்வியை இன்னும் என்னாலும், கோலியாலும் மார்க்க முடியல – கே.எல் ராகுல் பகிர்வு

KL-Rahul
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த கே.எல் ராகுல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக மெகா ஏலத்தில் பங்கேற்கும் அவரை பெரிய தொகைக்கு வாங்க பல்வேறு அணிகள் போட்டி போடும் என்பதனால் அவரது ஏலத்தின் மதிப்பு இம்முறை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அந்த தோல்வியை என்னால் இன்னும் ஏத்துக்க முடியல :

குறிப்பாக முக்கிய அணிகள் சிலவற்றில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடம் காலியாக உள்ளதால் அந்த இடத்தினை நிரப்ப கே.எல் ராகுல் சரியான தேர்வாக இருப்பார். எனவே நிச்சயம் அவருக்கு ஏலத்தில் பெரிய போட்டியே காத்திருக்கிறது. இந்நிலையில் லக்னோ அணியில் இருந்து வெளியேறியிருக்கும் ராகுல் தான் எந்த இடத்திலும் களமிறங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அவரை இம்முறை ஆர்.சி.பி அணி வாங்க அதிக முனைப்பு காட்டும் என்று தெரிகிறது. ஏனெனில் தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை நிரப்ப வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரு அணிக்காக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணி இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்ததாக கே.எல் ராகுல் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த 2013-ஆம் ஆண்டு நான் ஆர்.சி.பி அணிக்காக ஒப்பந்தமானேன். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு மீண்டும் பெங்களூரு அணிக்கு சென்ற போது மிகச் சிறப்பாக உணர்ந்தேன். அது ஒரு அழகிய பயணமாக இருந்தது.

- Advertisement -

பெங்களூரு அணிக்காக சொந்த மண்ணில் விளையாடும் போது எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு எனக்கு பலமாக இருக்கும். அந்த நேரத்தில் நான் மிகச் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன். நிச்சயம் இம்முறை பெங்களூரு அணியில் இடம்பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் மிகச் சிறப்பான கம்பேக்கை கொடுக்க ஆர்வமாக காத்திருக்கிறேன். இம்முறை ஐபிஎல் தொடரை புதிதாக தொடங்க வேண்டும் என்ற விருப்பம் என்னிடம் உள்ளது.

இதையும் படிங்க : ஆஸி அணிக்கெதிரான முதல் 2 போட்டிகளுக்கு பிறகு எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் முகமது ஷமி – இடம்பெற வாய்ப்பு

கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாகவே நானும் விராட் கோலியும் பலமுறை அந்த தோல்வி குறித்து பேசி வருத்தப்பட்டுள்ளோம். ஒருவேளை அந்த போட்டியில் நானோ அல்லது அவரோ இன்னும் கூடுதலான நேரம் மைதானத்தில் நின்று பேட்டிங் செய்திருந்தால் நிச்சயம் அந்த போட்டியை வென்றிருக்க முடியும். அந்த தோல்வியை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement