விராட் கோலியை மறந்துட்டு காதலிக்கு மறக்காமல் வாழ்த்து தெரிவித்த கே.எல் ராகுல்

KL-Rahul
Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான விராத் கோலி இன்று தனது 34-ஆவது பிறந்த நாளை மெல்போர்ன் நகரில் சக இந்திய வீரர்கள் மற்றும் இந்திய அணியின் ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அவரது இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்திய அணியில் மனநல ஆலோசகராக பயணிக்கும் பேடி ஆப்டனும் கலந்து கொண்டு அவரும் தனது 54-ஆவது பிறந்த நாளை விராட் கோலியுடன் சேர்ந்து ஒன்றாக கேக் வெட்டி கொண்டாடினார். உலக அளவில் விராட் கோலி கிரிக்கெட்டில் எண்ணற்ற பல சாதனைகளை புரிந்தவர் என்பதாலும் தற்போது ஜாம்பவான் அளவிற்கு பேசப்பட்டு வரும் அவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி இளம் துவக்க வீரரான கே.எல் ராகுல் இன்று விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்தினை அவரது சமூக வலைதளத்தில் பதிவிடாமல் அவரது காதலியான அதியா ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் : அதியா ஷெட்டியுடன் எடுத்துக்கொண்ட மூன்று புகைப்படங்களை பகிர்ந்த கே எல் ராகுல் அதில் குறிப்பிட்டதாவது : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். “நீ அனைத்தையுமே சிறப்பாக மாற்றி விட்டாய்” என ஹார்டின் பதிந்து தனது காதலை வெளியிட்டார்.

அவர் பதிவிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகவே பலரும் அதியா ஷெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அதியா ஷெட்டியின் சகோதரர், தந்தை சுனில் ஷெட்டி, க்ருனால் பாண்டியாவின் மனைவி என பிரபலங்கள் பலரும் அதியா ஷெட்டிக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இப்படி கிரிக்கெட்டில் தனது குருவாக பார்க்கும் விராட் கோலியை விடுத்து அவரது காதலிக்கு கே.எல் ராகுல் பதிவிட்ட இந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கோலியின் ரசிகர்கள் சிலரும் விராட் கோலியை மறந்து தனது காதலிக்கு கே.எல் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் இந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விராட் கோலியுடன் சேர்ந்து ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடிய இந்த அதிகாரி யார் தெரியுமா? – விவரம் இதோ

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் மூன்று வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும் இந்த நான்கு போட்டியிலும் சேர்த்து ஒரே ஒரு அரை சதத்தை மட்டும் அடித்த கே.எல் ராகுல் கடந்த போட்டியின் போது தான் ஃபார்மிற்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement