IND vs ZIM : டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்ய என்ன காரணம் ? – கேப்டன் கே.எல் ராகுல் விளக்கம்

KL-Rahul
Advertisement

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது தற்போது ஹராரே நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்ய காத்திருக்கிறது.

INDvsZIM

இந்த தொடரின் முதல் போட்டியின் போது 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய இந்திய அணியானது இரண்டாவது போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதை தேர்வு செய்தது. அதனால் இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

மேலும் இந்த இரண்டு போட்டியிலுமே ஜிம்பாப்வே அணி 200-க்கும் குறைவாகவே ரன்களை அடித்ததால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் இன்று துவங்கிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானம் செய்தார். அதன் காரணமாக இன்றைய போட்டியில் இந்திய அணி முழுவதுமாக 50 ஓவர்களும் விளையாடும் என்றும் அனைத்து வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

KL Rahul

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான டாசுக்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் ஏன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன் என்பதற்கான காரணத்தை தெளிவாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளுமே நாங்கள் டாஸ் வென்றதும் பந்து வீசி விட்டோம். ஆனால் இம்முறை பேட்டிங்கை தேர்வு செய்து எங்களுக்கு நாங்களே சவால் விடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி இந்த தொடரில் நான் ரன்களை குவிக்க மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன். எனவே களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இதையும் படிங்க : IND vs ZIM : கடைசி போட்டிக்கான அணியின் 2 மாற்றங்களை செய்த கே.எல் ராகுல் – இந்திய அணி முதலில் பேட்டிங்

மேலும் இந்திய அணியும் 50 ஓவர்கள் பேட்டிங் செய்து முதலில் பெரிய ஸ்கோரை செட் செய்து அவர்களை வீழ்த்த வேண்டும். இப்படி ஒரு சவாலுக்காகவே நான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தேன் என்று கேப்டன் கே.எல் ராகுல் தெளிவாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement