இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி 2 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று ஜிம்பாப்வே தலைநகரான ஹராரேவில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தற்போது இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் அணியில் விளையாடாமல் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இன்றைய கடைசி போட்டிக்கான இந்திய அணிகள் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் புதிதாக எந்த வீரருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த இரண்டாவது போட்டியில் விளையாடிய பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர் மற்றும் ஆவேஷ் கானுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணிக்கெதிரான கடைசி போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு எப்போது தெரியுமா? – பி.சி.சி.ஐ வெளியிட்ட முக்கிய தகவல்
1) சுப்மன் கில், 2) ஷிகார் தவான், 3) இஷான் கிஷன், 4) கே.எல் ராகுல், 5) தீபக் ஹூடா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் பட்டேல், 8) தீபக் சாகர், 9) ஷர்துல் தாகூர், 10) ஆவேஷ் கான், 11) குல்தீப் யாதவ்.



