எனக்கு தொல்லை குடுக்கும் ஒரு பவுலர்ன்னா அது அவரு மட்டும் தான் – கே.எல் ராகுல் பதில்

KL-Rahul
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்ததால் நட்சத்திர நமபிகை வீரரான கே.எல் ராகுல் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார்.

அப்படி தான் வழிநடத்திய 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய அவர் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற உதவியிருந்தார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மீண்டும் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியிருந்தனர்.

- Advertisement -

அதன்படி நேற்று ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முழுவதுமே அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது இடத்தில் அவரது ஆட்டம் பிரகாசமாக இருப்பதினால் உலகக் கோப்பை தொடரிலும் அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக ஜியோ சினிமாவில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு கே.எல் ராகுல் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

அந்த தகவல்கள் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் உங்களுக்கு சவாலான பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்வி ராகுலிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் கூறுகையில் : ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தான் எப்பொழுதுமே எனக்கு பெரும் தொல்லை கொடுக்கும் பந்துவீச்சாளர் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க : சிக்ஸர்ன்னா இனி ஹிட்மேன் தான். நியூசி வீரர் மாட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளி உலகசாதனை – கெயிலை மிஞ்சவும் வாய்ப்பு

மேலும் கிரிக்கெட்டில் “GOAT” என்றால் சச்சின் டெண்டுல்கரை தான் தேர்வு செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதோடு சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரது விளையாட்டை பார்த்து தான் தனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வந்ததாக கூறிய அவர் ஏ.பி.டிவில்லியர்ஸ் அடிப்பது போன்று ஸ்கூப் ஷாட் அடிக்க ஆசை என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement