இந்த வருடத்தில் தொடரில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் சாதிக்கும் என்று நம்பிக்கை வைத்த அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனால் இந்த ஆண்டு அவர்களுக்கு மிக மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. புதிய கேப்டனாக ராகுல், புதிய பயிற்சியாளராக கும்ப்ளே ஆகியோர் தலைமையில் சிறப்பாக விளையாடும் என்று கருதப்பட்ட அணி பஞ்சாப்.
ஆனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி 7 போட்டிகளில் 6 போட்டியில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் பஞ்சாப் அணி ஒருவேளை தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முற்றிலும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
இந்நிலையில் ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டிக்கு முன்பாக இரு அணி கேப்டன்களும் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடினார். அந்த உரையாடலின்போது கோலி பல்வேறு கேள்விகளை ராகுலுக்கு எதிராக கேட்டார். அப்போது டி20 கிரிக்கெட்டில் எந்த விதி முறையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ராகுலிடம் கோலி கேட்டார்.
அதற்கு பதிலளித்த ராகுல் விமர்சையான ஒரு பதிலை அளித்தார். அதாவது உங்களையும், டிவில்லியர்ஸையும் அடுத்த சீசனில் ஐபிஎல் இல் இருந்து தடை செய்ய வேண்டும். ஏனென்றால் ஏனென்றால் நீங்கள் இருவரும் நிறைய சாதித்து விட்டீர்கள். ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் உட்பட ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக நீங்கள் இருவரும் விளங்குகிறீர்கள்.
இதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் நீங்கள் இருவரும் தடை செய்யப்பட வேண்டும் என்று விமர்சையான பதிலை தனக்கே உரித்தான பாணியில் சிரித்துக்கொண்டே ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.