முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – இந்திய அணிக்கு பின்னடைவு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் 25ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் விராத் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

INDvsNZ

- Advertisement -

இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுகிறார். அடுத்ததாக இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணியுடன் இணைய இருக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விராட் கோலியும் இந்த முதல் போட்டியில் விளையாட மாட்டார். இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மற்றொரு நட்சத்திர வீரரும் காயம் காரணமாக விலகியுள்ளதாக தற்போது அதிகாரபூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Rahul-1

அதன்படி இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது உறுதியான தகவல் என்பதனால் ராகுல் இந்திய அணியில் விலகியுள்ளது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது கன்பார்ம். அதுல மாற்றமே இல்ல – து.கேப்டன் புஜாரா பேட்டி

இருப்பினும் ராகுலின் இந்த விலகளால் இளம் வீரர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement