ஐ.பி.எல் தொடரில் இருந்தே அவரோட பேட்டிங் வேறலெவலில் இருக்கு – இளம்வீரரை பாராட்டிய கே.எல் ராகுல்

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது ஹராரே நகரில் நடைபெற்றது.

Shuman Gill

- Advertisement -

இந்த போட்டியில் மீண்டும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக மூன்றாவது வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 130 ரன்களையும் இஷான் கிஷன் 50 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Shubman Gill

இந்த போட்டியில் சதமடித்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்துவெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் இந்த வெற்றிக்கான பல்வேறு காரணங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதோடு இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில்லையும் அவர் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில் இந்திய அணிக்காக தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரிலிருந்து அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. அவருடைய பேட்டிங்கை பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் போட்டியில் அரை சதமடித்து விமர்சன வாய்களை நொறுக்க போறாரு – விராட் கோலி பற்றி ஜாம்பவான் கணிப்பு

அவர் அதீத நம்பிக்கையுடன் விளையாடவில்லை. ஆனால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அணிக்கு என்ன தேவையோ அதனை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த சீரான ஆட்டம் தற்போது முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவரது ஆட்டம் எங்களுக்கு மிக திருப்தியாக இருக்கிறது என ராகுல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement