இந்தியா 51/4 என திணறல்.. ராகுலுக்கு வழங்கப்பட்ட தவறான அநியாய தீர்ப்பு.. ஹைடன் விமர்சனம்

- Advertisement -

ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

அடுத்ததாக வந்த படிக்கலை டக் அவுட்டாக்கிய ஹேசல்வுட் அதற்கடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வைத்து 5 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கேஎல் ராகுல் நங்கூரமாக விளையாடினார். ஏற்கனவே சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த வாய்ப்பில் அசத்துவதற்காக 74 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

அநியாய தீர்ப்பு:

அப்போது ஸ்டார்க் வீசிய ஒரு பந்தை அவருடைய பேட்டில் உரசிக்கொண்டு ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கையில் தஞ்சமடைந்தது. அதை ஆஸ்திரேலியா அணியினர் அவுட் கேட்டும் களத்தில் இருந்த நடுவர் கொடுக்கவில்லை. அதை அடுத்து ஆஸ்திரேலிய அணியினர் ரிவ்யூ எடுத்த போது பந்து அவருடைய பேட்டில் உரசுவதாக அல்ட்ரா எடுத்து தொழில்நுட்பத்தில் ஸ்பைக் காண்பிக்கப்பட்டது.

அதனால் 3வது நடுவர் அவுட் என்று வழங்கியதால் ராகுல் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். ஆனால் ரிப்ளையில் பார்க்கும் போது அது அவுட்டில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அது பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “இதை நன்றாக பாருங்கள் கவாஸ்கர். பந்து செல்லும் நேரத்தில் பேட்டும் பேடும் ஒரே இடத்தில் இல்லை. பந்து அவருடைய பேட்டை கடந்து சென்ற பின் பேட் ராகுலின் காலில் படுகிறது”

- Advertisement -

ஹைடன் விமர்சனம்:

“அந்த சத்தத்தை தான் ஸ்னிக்கோ எடுத்துக்கொண்டு அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் ஸ்பைக் காட்டுகிறது” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதாவது 3வது நடுவர் ஒன்றுக்கு 2 முறை சரியாக கவனிக்காமலேயே ராகுல் அவுட் என்று அறிவித்ததாக ஹைடன் மறைமுகமாக விமர்சித்தார். அதே போல ஹர்ஷா போக்லே, முரளி கார்த்திக், ராபின் உத்தப்பா போன்ற இந்திய நட்சத்திரங்களும் ட்விட்டரில் அது பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியா.. 2 வீரர்கள் அறிமுகம்.. அஸ்வின், ஜடேஜா இல்லாத பிளேயிங் லெவன்.. பும்ரா பேட்டி

மேலும் இந்திய ரசிகர்களும் ராகுலுக்கு ஆஸ்திரேலிய நடுவர் அநியாய தீர்ப்பு வழங்கியதாக கொந்தளித்து வருகிறார்கள். இந்த நிலையில் முதல் நாள் உணவு இடைவெளியில் இந்தியா 51-4 என ஆரம்பத்திலேயே திணறி வருகிறது. களத்தில் ஜுரேல் 4*, ரிஷப் பண்ட் 10* ரன்களுடன் போராடி வருகிறார்கள்.

Advertisement