ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்திய நேரப்படி காலை 7:50 மணிக்கு துவங்கியது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அத்தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறுகிறது. அத்தொடரில் 4 போட்டிகளை வென்று ஃபைனலுக்கு செல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். குறிப்பாக பெர்த் மைதானத்தில் வரலாற்றில் நடைபெற்ற 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளை வென்றுள்ளன. அதை மையமாக வைத்து பும்ரா முதலில் பேட்டிங் செய்யும் முடிவை தீர்மானித்தார்.
அதிரடி மாற்றம்:
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் அறிமுகமாக களமிறங்குவதாகவும் அவர் அறிவித்தார். ஆஸ்திரேலியாவில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தேவை என்பதால் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி தேர்வாகியுள்ளார். அதே போல ஷமிக்கு பதிலாக ஆகாஷ் தீப் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராணாவை இந்திய அணி தேர்ந்தெடுத்துள்ளது.
அது போக ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா ஆகிய 2 சுழல் பந்து வீச்சு ஆல் ரண்டர்களையும் இந்திய அணி கழற்றி விட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் விளையாடுவதாக பும்ரா அறிவித்தார். மேலும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக சுமாரான ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல் துவக்க வீரராக விளையாடுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது பற்றி ஜஸ்ப்ரித் பும்ரா பேசியது பின்வருமாறு.
இந்திய அணி:
“நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். பிட்ச் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. எங்களுடைய தயாராகும் முறையில் முழு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். இங்கே 2018இல் ஏற்கனவே விளையாடியதால் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். பிட்ச் கொஞ்சம் வேகமாக செல்லும். நிதீஷ் அறிமுகமாக களம் இறங்க உள்ளார். நாங்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் சுந்தரை ஒரே ஸ்பின்னராக விளையாடுகிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:
கேஎல் ராகுல், யசஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தூத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பண்ட் (கீப்பர்), துருவ் ஜுரேல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்



