கே.எல் ராகுலுக்கு முக்கிய பொறுப்பினை வழங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 19-ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 28-ஆம் தேதி துவங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த வேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தது.

டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கும் கே.எல் ராகுல் :

இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என தற்போது அந்த அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

அதேபோல் உள்நாட்டு வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என தரமான குழுவை கொண்ட அணி என்பதாலும் இம்முறை மிகப்பெரிய அளவில் அவர்கள் பிரகாசிக்க முடியும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அந்த அணியின் நிர்வாகம் சார்பில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த சீசனுக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க வீரராக கே.எல் ராகுல் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக அடிக்கடி துவக்க வீரர்களுக்கான ஜோடி மாற்றப்பட்டது தான் பார்க்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : அவர் வரும் வரை இஷான் கிஷன் தான் கேப்டன்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் ரைசர்ஸ் – விவரம் இதோ

ஏனெனில் கடந்த ஆண்டு பல்வேறு முறை அந்த அணியின் துவக்க வீரர்கள் மாற்றி மாற்றி களம் இறக்கப்பட்டனர். ஆனால் இம்முறை கே.எல் ராகுலை முதன்மை துவக்க வீரராக களத்தில் இறக்கி அவருடன் சரியான பார்ட்னரை அனுப்ப டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முடிவு செய்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய கே.எல் ராகுல் 539 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement