- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எங்களை விட வெற்றிக்கு ராணா தான் காரணம்.. இந்திய அணியில் எனக்கு இது கிடைச்சாலே போதும்.. ராகுல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி நேற்று வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்திய அணி 49 ஓவரில் 306/6 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 84, ஹென்றி நிகோலஸ் 62, டேவோன் கான்வே 56 ரன்கள் எடுத்தார்கள்.

பந்து வீச்சில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்திய அணிக்கு பேட்டிங்கில் அதிகபட்சமாக விராட் கோலி 93, கேப்டன் கில் 56, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரங்கள் எடுத்தார்கள். பந்து வீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

- Advertisement -

முக்கியமான ராணா:

அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி 2026 புத்தாண்டை வெற்றிகரமாக துவக்கியது. முன்னதாக அப்போட்டியில் கோலி, ஸ்ரேயாஸ், ஜடேஜா ஆகியோர் முக்கிய நேரத்தில் குறுகிய இடைவெளியில் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. அப்போது களமிறங்கிய ஹர்ஷித் ராணா அதிரடியாக 29 (23) ரன்கள் குவித்து திருப்புமுனையை உண்டாக்கினார்.

அதை வீணடிக்காமல் கே.எல். ராகுல் 29* (21), சுந்தர் 7* (7) ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில் இப்போட்டியில் தங்களை விட ராணா அடித்த ரன்கள் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் கேஎல் ராகுல் இந்திய அணியில் தமக்கு பிளேயிங் லெவனில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தாலேயே அசத்துவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வாய்ப்பு கொடுத்தா போதும்:

“கடைசி 4 – 5 ஓவரில் அழுத்தம் வந்ததாக எனக்குத் தோன்றவில்லை. இருப்பினும் ராணா வந்ததும் சிறப்பான வேலை செய்து என் மேலே இருந்த அழுத்தத்தை நீக்கினார். அவர் பந்தை அடித்த விதம் திடீரென சேசிங்கை எளிதாக்கியது. அதனால் நான் அமைதியுடன் இறுதி வரை விளையாடினேன். ஓவருக்கு 6, 6.5 ரன்கள் தேவைப்படக்கூடிய இது போன்ற போட்டிகளில் 10க்கு 9 முறை நாங்கள் வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை”

“முதல் இன்னிங்சில் காயமடைந்ததால் வாஷிங்டன் சுந்தரால் ஓட முடியாது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவர் பந்தை நன்றாக டைமிங் கொடுத்து அடித்தார். நாங்கள் அதிக டாட் பந்துகளை எதிர்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பிட்ச் போட்டி முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது. புதிய பந்தில் பேட்டிங் செய்வது நல்ல நேரமாக இருந்தது. ரோஹித், விராட், கில் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு சரியான பாதையைக் கண்டறிந்தது”

இதையும் படிங்க: கஷ்டமான அதை விராட் கோலி ஈஸியாக்கிட்டாரு.. அதுக்காக இந்திய அணியை உருவாக்குறேன்.. கேப்டன் கில் பேட்டி

“பிட்ச் கடைசி நேரங்களில் ஸ்லோவாக மாறினாலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எங்கள் வேலையை எளிதாக்கினார்கள். நியூசிலாந்துக்கு எதிராக இப்படி நாங்கள் நிறைய போட்டிகளை கடைசி ஓவரில் முடித்துள்ளோம். அந்தளவுக்கு தரமான நியூஸிலாந்து அணி எப்படியாவது கம்பேக் கொடுக்கும் வழியைக் கண்டறிவார்கள். அதுவே இந்தியா – நியூஸிலாந்து போட்டிகளின் சிறப்பம்சம். பிளேயிங் லெவனில் நான் அங்கமாக இருந்தால் போதும். அதற்காக கீப்பிங் போன்ற எந்த வேலையும் செய்ய தயார். எஞ்சிய போட்டிகளுக்காகவும் காத்திருக்கிறேன்” என்று கூறினான்.

- Advertisement -