டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அப்படி கேப்டன் பதவியை ஏற்ற அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட மிக பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றது.
18 ஆவது இந்திய வீரராக கே.எல் ராகுல் நிகழ்த்தப்போகும் அசத்தல் சாதனை :
அதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் சில நட்சத்திர இந்திய வீரர்கள் குறிப்பிட்ட சில சாதனைகளுக்காக காத்திருக்கின்றார்.
அந்த வகையில் இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை 18 ஆவது இந்திய வீரராக நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 65 போட்டிகளில் விளையாடி 11 சதம் மற்றும் 20 அரைசதம் என 36 ரன்கள் சராசரியுடன் 3985 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில் அவர் தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது மேலும் 15 ரன்களை குவிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 4,000 ரன்களை தொட்ட 18-ஆவது இந்திய வீரராக சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : கபில் தேவிற்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தவிருக்கும் சாதனை – விவரம் இதோ
ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்று வெளியேறிய பிறகு துவக்க வீரருக்கான நிரந்தர இடத்தை பிடித்த கே.எல் ராகுல் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 இன்னிங்ஸ்களில் 745 ரன்கள் குவித்துள்ளார். அதில் மூன்று சதம் மற்றும் மூன்று அரைசதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



