இந்த கடினமான வேளையில் இந்த ஒரு விடயம் என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு – கே.எல் ராகுல் ஓபன் டாக்

Rahul
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச அளவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் உள்ளது. மேலும் அடுத்து எப்போது இந்த நிலைமை சீராகும் என்று தெரியாத நிலையில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டில் முடங்கி உள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தற்போதைக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

IND-2

- Advertisement -

இந்த நேரத்தில் கிடைத்த ஓய்வினை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கள் வீரர்கள் தங்கள் அனுபவங்களையும் நேரலையின் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான ராகுல் சக வீரரான அகர்வாலுடன் நேரலையில் பங்கேற்று சில விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் ஐபிஎல் தொடர் குறித்து பேசிய ராகுல் கூறுகையில் : ஐபிஎல் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன். ஏனெனில் இம்முறை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த தொடரை எனக்கு முக்கியமான தொடராக பார்க்கிறேன். மேலும் இந்த அணியில் கெயில், மேக்ஸ்வெல், அகர்வால் என தலைசிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்களை வழிநடத்த இருப்பது எனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rahul

எனவே இந்த கடினமான வேலையில் இந்த தொடரை மிகவும் மிஸ் செய்கிறேன் என்று ராகுல் கூறினார். ஆனால் ஐபிஎல் தொடர் குறித்து இன்னும் இறுதி கட்டமாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் டி20 உலகக்கோப்பை நடக்காமல் போனால் ஐபிஎல் தொடர் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது.

Rahul 1

இந்தியாவில் இன்னும் கொரோனா தாக்கம் குறையாமல் இருப்பதாலும், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாகவும் இந்த தொடர் ரசிகர்கள் இன்றி நடைபெற்றாலும் வெளிநாட்டு வீரர்களையும் விளையாட அனுமதித்து மேலும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் இந்த தொடர் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Advertisement