இங்கிலாந்து தொடரில் இருந்து விலகவுள்ள இந்திய நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் – காரணம் இதோ

KL-Rahul
- Advertisement -

அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகல் :

அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியானது இங்கு இந்திய அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

எதிர்வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் இந்த தொடரானது துவங்க இருக்கிறது. அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெறவுள்ள வேளையில் அதற்கு ஆயுத்தமாகும் வகையில் இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளதால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்த இங்கிலாந்து தொடரில் இடம் பெறும் வீரர்கள் குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து கே.எல் ராகுல் விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனக்கு பிரேக் வேண்டும் என்று கே.எல் ராகுல் கேட்டுக் கொண்டதால் அவரை இங்கிலாந்து தொடருக்கான அணியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தான் தயாராக வேண்டி இந்த ஓய்வை கே.எல் ராகுல் கேட்டுள்ளதால் பிசிசிஐ-யும் அவருக்கு அனுமதி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : 20 வருஷமா நான் நேசிச்ச விஷயத்தில் இருந்து வெளியேறுகிறன்.. உருக்கமான ஓய்வை அறிவித்த – இந்திய வீரர்

அடுத்த மாதம் துவங்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி ஜனவரி 12-ம் தேதி அறிவிக்கப்படும் வேளையில் இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் மாற்று விக்கெட் கீப்பராக கே.எல் ராகுலும் இடம் பிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement