- Advertisement -
ஐ.பி.எல்

2026 டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் இவர்தான்.. நிர்வாகத்தால் ஏற்படவுள்ள – அதிரடி மாற்றம்

எதிர்வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபுதாபி நகரில் நடைபெற்ற முடிந்தது. இந்த மினி ஏலத்தின் போது அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகங்களும் கலந்து கொண்டு தங்களது அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து தங்களது அணிகளை பலப்படுத்தி உள்ளன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு வரப்போகும் புதிய கேப்டன் :

இதன் காரணமாக எதிர்வரும் 2026 ஐ.பி.எல் தொடரில் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அக்சர் பட்டேல் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கே.எல் ராகுல் புதிய கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

ஏனெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணியான டெல்லி கேபிட்டல்ஸ் அணி இம்முறையும் இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தது.

இருந்தாலும் தொடரின் பிற்பாதியில் பெரிய பின்னடைவை சந்தித்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி பிளே ஆப் சுற்றின் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதன் காரணமாக அக்சர் பட்டேலின் கேப்டன் பதவியை நீக்கி அவரை மீண்டும் துணை கேப்டனாக மாற்ற நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் அனுபவம் வாய்ந்த வீரரான கே.எல் ராகுலை புதிய கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. கே.எல் ராகுல் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சில அணிகளை முன்நின்று வழிநடத்தி உள்ளதால் அவரிடம் அடுத்த ஆண்டிற்கான கேப்டன்சி வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை விட அபிஷேக் சர்மா இந்த விடயத்தில் பெஸ்ட்.. அவரை யூஸ் பண்ணுங்க – சிறுவயது கோச் பேட்டி

இருந்தாலும் அதனை அவர் ஏற்பாரா? மாட்டாரா? என்பது அவரது விருப்பம் தான் என்றும் தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டனாக இருந்த அவர் சில கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டுள்ளதால் மீண்டும் கேப்டன்சியை ஏற்பாரா? என்பது அவரது முடிவை பொறுத்தே இருக்கும்.

- Advertisement -