இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுல் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இன்று துவங்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கேப்டனாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியை வழிநடத்தும் தகுதி உடைய வீரராக பார்க்கப்படும் ராகுல் அவ்வப்போது இந்திய அணிக்கு கேப்டன் செய்து வருகிறார். இந்நிலையில் அருண் ஜேட்லி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராகுல் நேற்று பயிற்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் காரணமாக இந்திய அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அதிகாரபூர்வ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி உள்ள ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் ராகுல் காயமடைந்து வெளியேறிய உள்ள விவகாரம் தற்போது பெரிய பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இளம் வீரரான கே.எல் ராகுல் இப்படி காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகுவது புதிதல்ல.
கடந்த 7 மாதத்தில் இவர் தற்போது நான்காவது முறையாக இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் ராகுல் இப்படி தொடர்ச்சியாக ஒரே ஆண்டிற்குள் நான்கு முறை காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறி இருப்பது நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல் இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்ந்த மட்டுமின்றி எதிர்கால கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். அப்படி மிகப்பெரிய பொறுப்பிற்கு தயாராகும் ஒரு வீரர் இப்படி காயம் அடைவது சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில் : வீரர்களின் வாழ்க்கையில் காயம் என்பது சகஜமான ஒன்று. ஆனாலும் அதனை சரியான முறையில் கண்கானித்து வீரர்கள் மிகவும் பிட்டாக இருக்க வேண்டியது அவசியம். தொழில்முறை கிரிக்கெட்டில் இது போன்று காயங்கள் ஏற்படுவது சாதாரண ஒன்றாக இருந்தாலும் சரியான பிட்னஸ் இருந்தால் மட்டுமே நீண்ட காலம் விளையாட முடியும் என்பதனால் நிச்சயம் இனி ராகுல் அதில் கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : என்னால இந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியல. இந்திய அணியின் கேப்டனானது குறித்து பேசிய – ரிஷப் பண்ட்
தற்போது காயம் அடைந்துள்ள அவர் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள நிர்வாகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் திறனை கண்காணிக்க உள்ளோம் எனவும் பிசிசிஐ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



