- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பயம் வந்துடுச்சு.. என்னால தோனி மாதிரி முடியாது.. சீக்கிரமே கிளம்பப் போறேன்.. ராகுல் வெளியிட்ட அறிவிப்பு

கர்நாடகாவைச் சேர்ந்த கே.எல். ராகுல் 2014 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்த அவர் 2018, 2019 ஐபிஎல் தொடர்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அசத்தினார். அதனால் இந்திய அணியில் சிகர் தவானை பின்னுக்குத் தள்ளிய அவர் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் துவக்க வீரராக முன்னேறியதுடன் துணை கேப்டன் அந்தஸ்தையும் பெற்றார்.

நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக கொஞ்சம் மெதுவாக விளையாடிய அவர் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானார். அதனால் ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் இடங்களை இழந்த அவர் 2023 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல உதவினார்.

- Advertisement -

தோனி மாதிரி:

இருப்பினும் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாடி லக்னோவின் தோல்விக்கு காரணமான அவரை உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு தற்சமயத்தில் தடுமாறும் கேஎல் ராகுல் இந்திய அணியில் தமக்கான இடத்தை இழந்து வருகிறார் என்றே சொல்லலாம். இந்நிலையில் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்க உள்ளதாக கே.எல் ராகுல் அறிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாதுகாப்பின்மை இல்லை. ஆனால் இவை அனைத்தும் முடிவடையும் என்ற உணர்வு உள்ளது. எனக்கு அது விரைவாக முடிவடைகிறது. நீங்கள் ஃபிட்டாக இருந்தால் 40 வயது வரை விளையாடலாம். அதுவே ஒருவருடைய அதிகபட்சமாகும். ஆம் 43 வயதாகும் எம்எஸ் தோனி இன்னும் விளையாடி வருகிறார். அவரைப் போல நீங்கள் ஐபிஎல் போன்ற மற்ற கிரிக்கெட்டில் விளையாடலாம்”

- Advertisement -

அனைத்துக்கும் முடிவிருக்கு:

“ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாட முடியாது. வாழ்க்கையில் சில நேரங்களில் பயம் மற்றும் உணர்தல் ஏற்படுகிறது. எனவே நீங்கள் விளையாடும் காலங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 30 வயதை கடந்ததிலிருந்தே எனக்கு பதற்றம் உள்ளது. என்னுடைய பாதையின் முடிவை பார்க்க முடிகிறது. 29 வயது வரை அதை என்னால் பார்க்க முடியவில்லை. எனது 30வது பிறந்தநாளில் சில விசித்திரமான சம்பவம் நடந்தது”

இதையும் படிங்க: கோபத்தில் முகமது ரிஸ்வானை காலி செய்யப் பார்த்த ஷாகிப் அல் ஹசனுக்கு.. ஐசிசி 2 தண்டனை அறிவிப்பு

“கிரிக்கெட்டில் விளையாட இன்னும் எனக்கு 10 வருடங்கள் உள்ளன என்பதை பார்க்க முடிந்தது கவலையளிக்கிறது. இது ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும் என்று முதல் முறையாக உணர்ந்தேன். என் வாழ்நாள் முழுவதும் நான் செய்ததெல்லாம் கிரிக்கெட் மட்டுமே. அதை நினைத்துப் பார்ப்பதற்குள் அது முடிவடைய உள்ளது. எனது முடிவு வெகுதொலைவில் இல்லை என்பதை பார்க்க முடிகிறது” என்று கூறினார். இங்கே ராகுல் ஓய்வு பெற்றதாக சமீபத்தில் வதந்தியான பதிவு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -