பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பெற்று வங்கதேசம் புதிய வரலாறு படைத்தது. அது போக பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்யாசத்தில் வென்ற முதல் அணியாகவும் வங்கதேசம் சாதனை படைத்தது.
மறுபுறம் சொந்த மண்ணில் கூட சுமாராக விளையாடிய பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான சாதனை படைத்தது. அதனால் அந்த அணி தற்சமயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கோபமான ஷாகிப்:
முன்னதாக அந்தப் போட்டியின் 5வது நாளில் முகமது ரிஸ்வான் பாகிஸ்தானின் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் 33வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரிஸ்வான் 2வது பந்துக்கு முன் நடுவரிடம் தெரிவித்து விட்டு வங்கதேச அணியின் ஃபீல்டிங்கை பின்னாடி திரும்பி பார்த்தார். ஆனால் அதற்குள் சாகிப் அல் ஹசன் பந்து வீச ஓடி வந்தார்.
அப்போது ரிஸ்வான் அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால் ஷாகிப் கோபமடைந்தார். அதனால் தன்னுடைய கையில் இருந்த பந்தை முகமது ரிஸ்வான் தலையை நோக்கி அவர் வேகமாக கோபத்துடன் எறிந்தார். நல்லவேளையாக கோபத்தில் குறி வைக்காமல் எறிந்ததால் ரிஸ்வான் மேலே சென்ற பந்தை விக்கெட் கீப்பர் பிடித்தார். மறுபுறம் “எதற்கு இப்படி பந்தை எறிகிறீர்கள்” என்ற வகையில் ரிஸ்வான் ரியாக்சன் கொடுத்த நிலையில் நடுவர் “ஏன் இப்படி செய்தீர்கள்” என்று ஷாகிப்பிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஐசிசி தண்டனை:
அதற்கு ஷாகிப் அல் ஹசன் எந்த ரியாக்சனும் கொடுக்காமல் தப்பினார். இந்நிலையில் அப்போட்டியில் “பந்து அல்லது விளையாட்டு உபகரணத்தை மற்றவர் மீது வேண்டுமென்றே எறிந்தார்” என்ற 2.9 விதிமுறையை சாகிப் அல் ஹசன் மீறியதாக ஐசிசி அறிவித்துள்ளது. எனவே அதற்கு தண்டனையாக அப்போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சுக்கு நூறான பாகிஸ்தானின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு.. வங்கதேசத்துக்கும் தண்டனையை அறிவித்த ஐசிசி
அத்துடன் 1 கேரியர் கருப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தங்களுடைய சொந்த நாட்டில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால் ஸ்டம்ப்களை உதைத்த ஷாகிப் அல் ஹசன் அதை பிடுங்கி எறிந்து நடுவரை மிரட்டினார். அதே போல இப்போட்டியிலும் நடந்து கொண்ட அவருக்கு ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



