- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அங்கயே இருங்க நீங்க வேஸ்ட் வரவேண்டாம். புகைப்படத்தை பதிவிட்டு வம்பில் மாட்டிக்கொண்ட ராகுல் – புகைப்படம் இதோ

இந்திய அணியின் இளம் வீரனான ராகுல் இந்திய அணிக்காக 2014 ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் ஆடி வந்ததாலும் அவ்வப்போது துவக்க வீரராகவும் விளையாடி வருகிறார் .

இருப்பினும் அவருடைய ஆட்டம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மிகவும் மந்தமாக உள்ளது ஆனால் கோலிக்கு அவர் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாக ராகுல் தொடர்ந்து அணியில் இடம் பிடித்து வருவதாகவும் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவர் உலக கோப்பை தொடரிலும் அதன் பின்னர் வந்த மேற்கிந்திய தீவுகள் தொடரிலும் சோபிக்கவில்லை.

- Advertisement -

இதனால் அவர் தென்னாபிரிக்க தொடரில் இடம் பெறவில்லை. இதனால் வருத்தம் அடைந்த ராகுல் தற்போது தனது ஆட்டத்தை மேம்படுத்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர் ஒரு மசாஜ் சென்டரில் உடலைக் குளிர் படுத்தும் ஒரு சாதனத்தில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் அவரை நீங்கள் இந்திய அணிக்கு வர வேண்டாம் நீங்கள் வேஸ்ட் அங்கே இருந்து விடுங்கள். மேலும் கிரிக்கெட் விளையாடி ரொம்ப களைப்பா ஆகிவிட்டீர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் மேலும் நீங்கள் என்ன அப்படி செய்துவிட்டீர்கள் இப்படி ரெஸ்ட் எடுப்பதற்கு என்று ஏகத்துக்கும் கமெண்டுகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by