- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸில் இதான் வேலை செய்யும்.. இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் பற்றி கவாஸ்கர் ஆலோசனை

ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை ஜூன் இரண்டாம் தேதி துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவில் துவங்கும் இத்தொடரின் முதன்மைப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கி உள்ளது.

பொதுவாக ஐசிசி தொடர் எங்கு நடைபெற்றாலும் அங்குள்ள கால சூழ்நிலைகளை அடிப்படையாக வைத்தே அனைத்து அணிகளும் தங்களுடைய கலவையை உருவாக்கும். அதாவது சூழ்நிலைகள் மற்றும் மைதானம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து எத்தனை பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் விளையாடு வேண்டும் என்பதை அணி நிர்வாகங்கள் திட்டமிடுவது வழக்கமாகும்.

- Advertisement -

கவாஸ்கரின் காம்பினேஷன்:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் சிராஜ், பும்ரா ஆகியோருடன் ஹர்டிக் பாண்டியா 3 வேகப்பந்து வீச்சாளராக செயல்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் போட்டிகளில் 3 ஸ்பின்னர்கள் விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பவுலிங் அட்டாக் மிகவும் முக்கியமானது. எனவே இந்தியா 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல வேண்டும். ஹர்திக் பாண்டியா 3வது பேக்-அப் வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம். இது இந்திய அணியின் சமநிலையை சமப்படுத்தும் என்று நினைக்கிறேன். நம்முடைய அணி அனுபவமும் மற்றும் இளமையும் கலந்த நல்ல அணியாக இருப்பதாகவும் நான் நம்புகிறேன்”

- Advertisement -

“விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருடன் ஜெய்ஸ்வால், சிவம் துபே, ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வலு செய்கின்றனர்” என்று கூறினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக ஸ்லோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால் ஆகிய 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஓய்வு பெற்றாலும் அது மாறாது.. அந்த மேட்ச்ல மட்டும் இந்தியா வெற்றியை விடக்கூடாது.. சுரேஷ் ரெய்னா பேட்டி

இதில் ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக தேர்வாகியுள்ளது பலமாகும். மேலும் சஹாலை விட குல்தீப் யாதவ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே பும்ரா, சிராஜ், பாண்டியா ஆகியோருடன் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய 6 பவுலர்கள் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார்கள். அதில் 3 பேர் ஆல் ரவுண்டர்கள் என்பதால் பேட்டிங் துறையிலும் சமநிலை ஏற்படும்.

- Advertisement -