- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மா வந்தாலும் பிரச்சனை இல்ல.. கே.எல் ராகுலுக்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதே தான் சொந்த காரணங்களுக்காக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அதன் பின்னர் எப்போது அணியில் இணைவேன் என்பதை உறுதியாக கூற முடியாது என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியை சொன்ன படியே தவிர்த்த அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருந்தது.

கே.எல் ராகுலுக்கு அடிச்ச ஜாக்பாட் :

இதன் காரணமாகவே அவர் அந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. பின்னர் ஆண் குழந்தை பிறந்த கையோடு தற்போது ஆஸ்திரேலியா வந்தடைந்துள்ள ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது கே.எல் ராகுல் துவக்க வீரராக அவருக்கு பதிலாக களமிறங்கி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதன் காரணமாக கே.எல் ராகுலை அந்த இடத்திலிருந்து நீக்கக்கூடாது என்றும் ரோகித் சர்மாவை ஆறாவது இடத்தில் இறக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ரோகித் சர்மா தனது துவக்க வீரருக்கான இடத்தை மாற்ற மாட்டார் என்பதனால் கே.எல் ராகுல் ஆறாவது இடத்திற்கு செல்வாரோ என்ற அச்சம் ஏற்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத வேளையில் அவரது காயம் குணமடைய மேலும் பத்து முதல் 14 நாட்களாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அவர் இரண்டாவது போட்டியிலிருந்து விலக உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அவரால் விளையாட முடியாது – வெளியான தகவல்

இதன் காரணமாக சுப்மன் கில் இறங்கும் மூன்றாவது இடத்தில் கே.எல் ராகுல் விளையாடுவார் என்றும் அதன் காரணமாக முதல் போட்டியில் மூன்றாவது இடத்தில் விளையாடிய தேவ்தத் படிக்கல் அந்த இடத்திலிருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது. இப்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா திரும்பினாலும், கே.எல் ராகுலுக்கு டாப் ஆர்டரில் விளையாடும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -