வரலாற்றில் முதல் இந்திய கேப்டனாக மோசமான சாதனை பட்டியலில் இணைந்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

Rahul-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் தென்னாப்பிரிக்க பயணத்திற்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது.

ind

- Advertisement -

இதன் காரணமாக இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக கே.எல் ராகுல் செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதன்படி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன்சி அனுபவம் இல்லை என்றாலும் ஐபிஎல் அணியை மூன்றாண்டுகள் வழிநடத்திய ராகுலின் மீது கேப்டன்ஷிப் விஷயத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

ஏனெனில் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் மிகப் பெரிய வீரராக பார்க்கப்படும் கே.எல் ராகுல் நிச்சயம் பேட்டிங்கிலும் சரி, கேப்டன்சியிலும் சரி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முதல் மூன்று போட்டிகளிலுமே அவரது கேப்டன்சி மிக மோசமாக அமைந்தது. வீரர்களை பயன்படுத்துவதில் அவர் குழம்பிய விதமே தொடரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Rahul

மேலும் பீல்டிங் செட்-அப், பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம் என அனைத்திலுமே அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் இப்படி முதல் மூன்று போட்டிகளிலுமே மோசமான தோல்வியை சந்தித்ததால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அது யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : கோலியின் மோசமான பார்ம்க்கு அவர் கல்யாணம் பண்ணது தான் காரணம் – உளறிய முன்னாள் பாக் வீரர்

இந்திய அணிக்காக முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று முதல் மூன்று போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான வெங்சர்கர், ஸ்ரீகாந்த், முகமது அசாருதீன் ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement