டெஸ்ட் கிரிக்கெட்டில் விரேந்தர் சேவாக்கின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

Sehwag and KL Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும் பேட்டிங் ஆர்டரில் நிலையான இடமின்றி தவித்து வந்தார். தனக்கு அணியில் எந்த இடம் கிடைத்தாலும் அதில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவருக்கு தற்போது டெஸ்ட் அணியில் துவக்க வீரருக்கான நிரந்தர இடம் கிடைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை கே.எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பின் வரிசையில் விளையாடி வருகிறார்.

முரளி விஜய், சேவாக்கின் சாதனையை சமன் செய்த கே.எல் ராகுல் :

ஆனால் தற்போது நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அவர் துவக்க வீரராக விளையாடி வருகிறார். ஏனெனில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து விட்டதால் அவருக்கு பதிலாக தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கே.எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய கே.எல் ராகுல் முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கியிருந்தாலும் 42 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதற்கு அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 247 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர துவக்க வீரருக்கான வாய்ப்பையும் அளித்துள்ளது என்று நம்பலாம். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 50 ரன்கள் கடந்த போது முன்னாள் இந்திய துவக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோரது மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் கே.எல் ராகுல் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் “தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா” நாடுகளில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக அதிக முறை 50+ ரன்களை அடித்த வீரராக 19 முறையுடன் சுனில் கவாஸ்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து வீரேந்திர சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தலா 9 முறை 50+ ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் முரளி விஜய் மற்றும் சேவாக் ஆகியோரை கே.எஸ் ராகுல் சமன் செய்துள்ளார். அதாவது கே.எல் ராகுலும் மேற்குறிப்பிடப்பட்ட நான்கு நாடுகளில் துவக்க வீரராக ஒன்பதாவது முறையாக 50+ ஸ்கோரை குவித்துள்ளார். இதன்மூலம் முன்னாள் வீரர்களான விரேந்தர் சேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோரின் சாதனையும் கேஎல் ராகுல் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : 6 செஞ்சுரி அடிச்சி அதுல 5 லாஸ்.. ரிஷப் பண்டை தொடர்ந்து துரத்தும் சோகம் – விவரம் இதோ

ஏற்கனவே இந்திய அணியின் நிரந்த இடத்திற்காக போராடி வந்த கே.எல் ராகுல் தற்போது துவக்க வீரருக்கான இடத்தை கெட்டியாக பிடித்துள்ளதால் இன்னும் பல ஆண்டுகள் அனுபவ வீரராக இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் யூனிட்டை வழிநடத்துவார் என்று நம்பலாம்.

Advertisement