IND vs AUS : இவருக்கு இதான் கரெக்ட் – ஏபிடி, மைக்கேல் பெவனுக்கு நிகராக அசத்தி வரும் ராகுல் – ரசிகர்கள் வியப்பு

KL Rahul
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. மார்ச் 17ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியா பவுலிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவை வெறும் 188 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 81 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Siraj

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இசான் கிசான் 3, விராட் கோலி 4, சூரியகுமார் யாதவ் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாக சுப்மன் கில் 20, ஹர்டிக் பாண்டியா 25 என முக்கிய வீரர்களும் போராடி பெரிய ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். அதனால் 83/5 என தடுமாறிய இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான போது ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடுமையாகப் போராடி ஆஸ்திரேலியாவுக்கு வளைந்து கொடுக்காமல் 6வது விக்கெட்டுக்கு 108* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை 191/5 ரன்கள் எடுக்க வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இதான் கரெக்ட்:
அதில் 2 விக்கெட்கள் மற்றும் 45* ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 75* (91) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்த கேஎல் ராகுல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக வெற்றியில் முக்கிய பங்காற்றினார். முன்னதாக கடந்த 2014இல் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறிய அவர் கடந்த 2019 வாக்கில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிரந்தர இடத்தை பிடித்தார். ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது.

அதனால் துணை கேப்டன்ஷிப் பதவி மற்றும் ஓப்பனிங் இடத்தை இழந்த அவர் ரிஷப் பண்ட் காயமடைந்ததால் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு கடைசியாக பெற்றுள்ளார். அந்த இடத்தில் கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 4 முறை 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய போது 3 போட்டிகளில் அரை சதமடித்து ராகுல் வெற்றி பெற வைத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 5வது இடத்தில் 7(8), 80(52), 88*(64), 4(8), 112 (113), 12(15), 76(66), 5(11), 62*(43), 7(18), 73(70), 14(28), 8(10), 39(29), 64*(103), 7(6), 75*(91) என நல்ல ரன்களை குவித்துள்ள அவர் 7 அரை சதங்கள் 1 சதம் உட்பட சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக 219 ரன்களை துரத்தும் போது 86/4 என தடுமாறிய இந்தியாவை 64* ரன்கள் குவித்து இதே போல காப்பாற்றினார். அந்த வகையில் சிறப்பாக செயல்படும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது இடத்தில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் குறைந்தது 500+ ரன்கள் எடுத்த 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் இடம் பிடித்துள்ளார்.

KL Rahul 1

குறிப்பாக மைக்கேல் பெவன், ஏபி டீ வில்லியர்ஸ், கெவின் பீட்டர்சன், ராசி வேன் டெர் டுஷன் ஆகியோருடன் 5வது இடத்தில் அசத்தும் பேட்ஸ்மேனாக ராகுல் இடம் பிடித்துள்ளார். அப்படி ஓப்பனிங் இடத்தை விட 5வது இடத்தில் பேசாமல் இந்த இடத்தில் இவர் தொடர்ந்து விளையாடலாம் என்று பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs AUS : டாப் ஆர்டர் சொதப்பியும் 36 வருடத்துக்கு பின் சாதனை வெற்றி பெற்ற இந்தியா – ராகுல், ஜடேஜாவை பாராட்டும் ரசிகர்கள்

அத்துடன் இதுவரை 50 இன்னிங்க்ஸில் 1945 ரன்கள் எடுத்துள்ள கேஎல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 50 இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற ராகுல் டிராவிட் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 1919 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் 2049 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Advertisement