IND vs AUS : டாப் ஆர்டர் சொதப்பியும் 36 வருடத்துக்கு பின் சாதனை வெற்றி பெற்ற இந்தியா – ராகுல், ஜடேஜாவை பாராட்டும் ரசிகர்கள்

IND vs AUS KL Rahul Jadeja
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கோப்பையை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்ற இந்தியா அடுத்ததாக அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. மார்ச் 17ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 188 ரன்களுக்கு சுருண்டது.

Siraj

- Advertisement -

அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 81 (65) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து 189 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பவுலிங்க்கு சாதகமாக இருந்த அதே பிட்ச்சில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவிடம் இஷான் கிசான் 3, விராட் கோலி 4, சூர்யகுமார் யாதவ் 0 என முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

வரலாற்று வெற்றி:
அதனால் 16/3 என சரிந்த இந்தியாவை காப்பாற்ற முயன்ற சுப்மன் கில் 20 ரன்களிலும் ஹர்டிக் பாண்டியா 25 ரன்களிலும் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 83/5 என மேலும் சரிந்த இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – ரவீந்திர ஜடேஜா இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி நிதானமாக பேட்டிங் செய்து 6வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர்.

KL Rahul

அதில் ராகுல் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 75* (91) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் 45* (69) ரன்களும் எடுத்ததால் 39.5 ஓவரிலேயே 191/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்துள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலியா பந்து வீச்சில் போராடியும் இலக்கு குறைவாக இருந்ததால் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் இசான் கிசான் 3, விராட் கோலி 4, சூர்யகுமார் யாதவ் 0 என 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 5 ஓவரில் 16/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனாலும் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஸ்டீவ் ஸ்மித் போட்ட அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

IND vs AUS ODi

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 3 விக்கெட்டுகளை மிகவும் குறைந்த ரன்களுக்கு இழந்த பின்பும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1986ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 133 ரன்களை துரத்தும் போது சுனில் கவாஸ்கர் 0, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 11, முஹம்மது அசாருதீன் 6 என 3 டாப் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 19/3 என இந்தியா ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

ஆனாலும் ரவி சாஸ்திரி 25, கீர்த்தி ஆசாத் 30, சந்திரகாந்த் பண்டிட் 33* என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பால் தப்பிய இந்தியா 41.4 ஓவரில் 134/7 ரன்கள் எடுத்து வென்றது. அப்போட்டியில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தும் வெற்றி கண்ட இந்தியா இப்போட்டியில் 16 ரன்களுக்குள்ளேயே 3 விக்கெட்டுகளை இழந்தும் 36 வருடத்திற்கு பின் அதை விட சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

KL Rahul 1

இதையும் படிங்க:IND vs AUS : ராகுல் – ஜடேஜாவை தாண்டி வெற்றியை பரிசாக்கிய இந்திய பவுலர்கள், ஆஸியை தெறிக்க விட்டு 22 வருட புதிய சாதனை

அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோரை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். அந்த சாதனைகளின் விரிவான பட்டியல் இதோ:
1. 16 ரன்கள் : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பை, 2023*
2. 19 ரன்கள் : நியூசிலாந்துக்கு எதிராக சார்ஜா, 1986
3. 20 ரன்கள் : தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா, 1991
4. 21 ரன்கள் : நியூசிலாந்துக்கு எதிராக செஞ்சூரியன், 2023
5. 24 ரன்கள் : கென்யாவுக்கு எதிராக, கேப் டவுன், 2003

Advertisement