
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சார்பில் நடத்தப்பட்டு அண்மையில் முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பின்னர் தற்போது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் இந்த ஆண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை அதன் சொந்த மைதானமான ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சந்திக்க இருக்கிறது.
இதன் காரணமாக தற்போது அனைத்து அணியின்களை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற்றதால் 10 அணிகளிலுமே வீரர்களை மாற்றம் நடைபெற்றது. அதேபோன்று ஒரு சில அணிகளில் கேப்டன்சி மாற்றவும் நடைபெற்றது.
அந்த வகையில் தற்போது டெல்லி அணியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் தங்களது அணியின் கேப்டனை அறிவித்துள்ள வேளையில் தற்போது டெல்லி அணி மட்டும் இதுவரை கேப்டனை அறிவிக்காமல் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கே.எல் ராகுலை டெல்லி அணி கேப்டனாக நியமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் கேப்டன்சி அனுபவம் உடைய அவர் டெல்லி அணியை வழிநடத்தினால் நன்றாக இருக்கும் என்று அந்த அணி நிர்வாகம் நினைத்தது. ஆனால் தற்போது தனக்கு டெல்லி அணியின் கேப்டன் பதவி வேண்டாம் என்று கே.எல் ராகுல் நிராகரித்ததாகவும் தான் ஒரு வீரராக அணிக்கு பணியாற்ற விரும்புவதாகவும் அவர் அந்த அணியின் நிர்வாகத்திடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்னர் ரோஹித் சர்மா செய்த செயல்.. நியாபக மறதியால் ஏற்பட்ட கலகலப்பு – விவரம் இதோ
இதன் காரணமாக டெல்லி அணி புதிய கேப்டனை நிர்ணயிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கையில் ஏற்கனவே அக்சர் பட்டேலை அந்த அணி 18 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளதால் அவரையே கேப்டன் பதவிக்கு நியமிக்கும் என்று தெரிகிறது.