ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது . இந்த பெரிதாக இல்லை ஆனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை அடித்து துவம்சம் செய்து வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அற்புதமாக 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார் இதில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் அடங்கும் .
முதலில் பேட்டிங் செய்த இவர் கடைசி வரை நின்று பஞ்சாப் அணியை தனித்தனியாக 200 ரன்களை கடக்க வைத்தார் இந்த 132 ரன்கள் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கர் ஒரு மிகப்பெரிய சாதனையை முறியடித்திருக்கிறார். அதாவது ஐபிஎல் தொடர்களில் குறைந்த போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கேஎல் ராகுல்
இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6 ஐபிஎல் தொடர்களில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 63 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து இருந்தார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் வெறும் 60 போட்டிகளில் 2000 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் பல ஆண்டுகால சாதனையை முறியடித்த பட்டிருக்கிறது.
இதே போட்டியில் கேஎல் ராகுல் பல சாதனைகள் படைத்து இருக்கிறார். ஒரு கேப்டனாக அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான் இதற்கு முன்னதாக டேவிட் வார்னர் 2017-ம் ஆண்டு 126 ரன்கள் அடித்திருந்தார் தற்போது 132 ரன்கள் அடித்த கேஎல் ராகுல் அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார்.
அவரின் இந்த சாதனைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் ராகுலின் ஆட்டமும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது குறிப்பிடத்தக்கது.