IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வரலாறு படைத்த கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL-Rahul
- Advertisement -

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி செப்டம்பர் 20-ஆம் தேதி இன்று மொஹாலி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து கே.எல் ராகுல் 55 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணியானது விளையாடி வருகிறது.

KL Rahul

இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் கே.எல் ராகுல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் 35 பந்துகளை சந்தித்த அவர் மூன்று சிக்சர் மற்றும் நான்கு பவுண்டரி என 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் டி20 கிரிக்கெட்டில் இன்றைய போட்டியின் மூலம் 2000 ரன்களை அவர் கடந்தார். இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரராக பாபர் அசாம் முதலிடத்தில் இருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 52 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் 2000 ரன்களை அடித்தார்.

இதையும் படிங்க : டி20 உ.கோப்பையை வெல்ல ரிஷப் பண்ட்டை இந்தியாவிலேயே விட்டு செல்ல வேண்டும் – முன்னாள் வீரர் அதிரடி கருத்து

அதனைத்தொடர்ந்து விராட் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்து இரண்டாவது இடத்திலும், அதனை தொடர்ந்து தற்போது கே.எல் ராகுல் 58 இன்னிங்ஸ்களுடன் 2000 ரன்களை கடந்து மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement