1.93 கோடி.. விராட், ரோஹித், தோனி உபகரணங்களால் அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த ராகுல்.. அதிக விலை யாருடையது?

Kl rahul 3
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி அதியா செட்டி மும்பையில் விளையாட்டு உபகரணங்களை வைத்து ஏலம் ஒன்றை நடத்தினார்கள். குறிப்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு விப்லா அறக்கட்டளையுடன் இணைந்து அவர்கள் ஏலத்தை நடத்தினார். அதில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நட்சத்திர வீரர்களின் சில உபகரணங்கள் ஏலம் விடப்பட்டது.

அதில் அதிகபட்சமாக இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி பயன்படுத்திய கையொப்பமிட்ட ஜெர்சி 40 லட்சத்திற்கு விலை போனது. 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா பயன்படுத்திய கையொப்பமிட்ட பேட் 24 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. ரோஹித் சர்மா பயன்படுத்திய பயன்படுத்திய கையுறைகள் 7.5 லட்சத்திற்கு விலை போனது.

- Advertisement -

வித்யாசமான ஏலம்:

அத்துடன் இந்தியாவின் ஜாம்பவான் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2024 ஐபிஎல் தொடரில் பயன்படுத்திய பேட் 1.30 லட்சத்துக்கும் வாங்கப்பட்டது. அதே ஐபிஎல் தொடரில் தோனி பயன்படுத்திய கையொப்பமிட்ட க்ளவுஸ் 3.50 லட்சத்துக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டது. இந்திய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ராஜஸ்தான் ஐபிஎல் அணிக்காக அணிந்து விளையாடிய கையொப்பமிட்ட ஜெர்சி 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டது.

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ராஜஸ்தான் ஐபிஎல் அணிக்காக அணிந்து விளையாடிய கையொப்பமிட்ட ஜெர்சி 55 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. இந்த ஏலத்தை நடத்தும் கே.எல் ராகுல் கையொப்பமிட்ட பேட் 7 லட்சத்திற்கு வாங்கப்பட்டது. அதே போல ஜாம்பவான் ராகுல் டிராவிட் கையொப்பமிட்ட பேட் 11 லட்சத்துக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா கையொப்பமிட்ட இந்திய அணியின் ஜெர்சி 8 லட்சத்திற்கும் விலை போனது.

- Advertisement -

மொத்தம் 1.93 கோடி:

தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டீ காக் கிளவுஸ் 11 லட்சத்துக்கும் கேஎல் ராகுல் இந்திய அணி ஜெர்சி 3.80 லட்சத்துக்கும் கையொப்பமிட்ட தொப்பி 22 லட்சத்துக்கும் வாங்கப்பட்டது. மேலும் சஞ்சு சாம்சன் கையெழுத்திட்ட ராஜஸ்தான் அணியின் ஜெர்ஸி 50 ஆயிரம் ரூபாய்க்கும், தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் கையப்பமிட்ட இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சி 4.2 லட்சத்துக்கும் வாங்கப்பட்டது.

இதையும் படிங்க: தோனியின் மாஸ்டர் முடிவு.. என்னோட இடம் வீணாகல.. ஷிகர் தவானுக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய சேவாக்

அது போக ரிஷப் பண்ட் பேட் 7 லட்சத்திற்கும் கிளவுஸ் 3.80 லட்சத்திற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் பேட் 2.80 லட்சத்திற்கும், ரவீந்திர ஜடேஜாவின் சிஎஸ்கே ஜெர்சி 2.40 லட்சத்திற்கும், கேஎல் ராகுல் கால் பேட் 2.40 லட்சத்திற்கும் விலை போனது. அப்படி மொத்தமாக அந்த ஏலத்தில் கிடைத்த 1.93 கோடி ரூபாயை ஆதரவற்ற குழந்தைகளுக்காக கேஎல் ராகுல் கொடுத்தது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement