இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்தது.
முதல் இந்திய விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் 92 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 112 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்திலிருந்தார். அவர் அடித்த இந்த சதம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது எட்டாவது சதமாக பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியாக சிறப்பான ஃபார்மில் விளையாடி வரும் கே.எல் ராகுலின் இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் இந்திய அணி 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் பின்வரிசை வீரர்களுடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து சதம் அடித்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த போட்டியின் போது 87 பந்துகளை சந்தித்திருந்த வேளையில் சதம் அடித்த கே.எல் ராகுல் மொத்தமாக 92 பந்துகளை சந்தித்து 112 ரன்கள் குவித்தார். இதன்மூலம் எம்.எஸ் தோனி, ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் யாரும் நிகழ்த்தாத ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : போட்டி நடைபெறும் இந்த ராஜ்கோட் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமான கேஎல் ராகுல் :
இதையும் படிங்க : தோனியை பின்னுக்கு தள்ளி ஒருநாள் போட்டிகளில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ
இதுவரை 93 போட்டிகளில் விளையாடி 7 சதம் மற்றும் 20 அரைசதம் என 3247 ரன்களை குவித்துள்ளார். அதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : ஒருநாள் போட்டிகளில் தோனி 50.23 சராசரி வைத்திருக்கும் வேளையில் அவரை கடந்துள்ள கே எல் ராகுல் 51.67 என்ற அளவிற்கு தனது சராசரியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



