தோனியை பின்னுக்கு தள்ளி ஒருநாள் போட்டிகளில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul and MS Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

எம்.எஸ் தோனியை பின்னுக்கு தள்ளிய கே.எல் ராகுல் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்தது. பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 112 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அசத்தினார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்த அவர் மேலும் ஒரு சாதனையாக எம்/எஸ் தோனியை பின்னுக்கு தள்ளி அசத்தலான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : போட்டி நடைபெற்று வரும் ராஜ்கோட் மைதானத்தில் முதல் இந்திய வீரராக சதம் அடித்துள்ளார்.

இதையும் படிங்க : இவ்ளோ கொடுமையா இருக்கும்னு நான் நெனைக்கல.. தனது காயம் குறித்து பேசிய – ஷ்ரேயாஸ் ஐயர்

அதுமட்டும் இன்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது சராசரியை 51.67 என்ற சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளார். இதன் மூலம் தோனியின் சராசரியை (50.23) அவர் பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் அதிக சராசரி வைத்திருக்கும் இந்திய வீரராக விராத் கோலி 58.45 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுப்மன் கில் 56.34 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement