வீடியோ : ஒட்டுமொத்த தெ.ஆ வீரர்களிடமும் சண்டையிட்ட படி வெளியேறிய கே.எல் ராகுல் – நடந்தது என்ன?

Rahul
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு நாட்களிலேயே இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்சை முடித்துள்ளதால் நிச்சயம் இந்த போட்டியின் முடிவு மீதமுள்ள மூன்று நாட்களில் தெரியவரும். ஒருவேளை இந்தியா இந்த போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றும்.

thakur 2

அதே வேளையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்த தொடர் சமநிலை அடையவும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வேளையில் முதல் விக்கெட்டாக கேஎல் ராகுல் ஆட்டமிழந்து வெளியேறியபோது தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரிடமும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியில் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியானது அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோரது சிறப்பான பங்களிப்பின் மூலமாக நல்ல துவக்கத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் விக்கெட்டாக யான்சன் வீசிய பந்தில் மார்க்ரம்-மிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால் ராகுல் ஆட்டம் இழந்தது அந்த விக்கெட் சரியான விக்கெட் கிடையாது. பந்து பீல்டருக்கு முன்பே பிட்ச் ஆகியது ரீப்ளேயில் தெரிந்தது. இதை பலமுறை பலமுறை பார்த்த பிறகும் தெளிவான ஆதாரம் இல்லை என்பதனால் மைதானத்தில் இருந்த அம்பயர் கொடுத்த சாப்ட் சிக்னல் முடிவை பின்பற்றி அவுட் என்று 3 ஆவது அம்பயரும் அறிவித்தார்.

இதையும் படிங்க : வீடியோ : யார் டா நீ. உன்ன எங்க இருந்து பிடிச்சாங்க. ஷர்துல் தாகூரை பார்த்து – தமிழில் பாராட்டிய அஷ்வின்

இதனை ஏற்க முடியாத விரக்தியில் தலையை அசைத்தபடி ராகுல் வெளியே செல்ல அப்போது தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு ராகுலுக்கும் இடையே சற்று வார்த்தை மோதல் ஏற்பட்டது. அந்த சம்பவம் தற்போது வீடியோவாகவும் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement