வீடியோ : யார் டா நீ. உன்ன எங்க இருந்து பிடிச்சாங்க. ஷர்துல் தாகூரை பார்த்து – தமிழில் பாராட்டிய அஷ்வின்

Thakur
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களை மட்டுமே குவித்தது. அதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்க நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்ற நிலை இருந்தது.

Thakur-1

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் யாரும் எதிர்பாராத விதமாக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 61 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பவுலிங் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் போன்ற அதிவேகப் பந்து வீச்சாளர்கள் நம் அணியில் இருக்கும் வேலையில் ஷர்துல் தாகூர் எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் விக்கெட் எடுத்துக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த போட்டியிலும் சில விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 7 விக்கெட் வீழ்த்தியது அனைவருக்கும் ஆச்சரியமாகவே அமைந்தது.

இந்நிலையில் ஷர்துல் தாகூர் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய போது அனைத்து வீரர்களும் அவரிடம் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் அவரை பாராட்ட சென்ற அஷ்வின் அவரின் அருகே சென்றபோது “யார்ரா நீ”, “எங்கிருந்து புடிச்சாங்க உன்ன”, “நீ பால் போட்டாலே விக்கெட் விழுது” என்று தமிழில் நகைச்சுவையாக கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : இதைவிட ஒரு ஒர்ஸ்ட்டான ரெவியூ யாரும் எடுத்திருக்க மாட்டாங்க – மிஸ் பண்ணாம பாருங்க

அவரது வார்த்தைகள் தற்போது ஸ்டம்ப் மைக்கில் பதிவானதால் அது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் எப்போதும் இளம் வீரர்களை வாய்விட்டு பாராட்டி வரும் அஷ்வின் ஷர்துல் தாகூரையும் தமிழில் பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement