- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கவாஸ்கர் – ஸ்ரீகாந்தின் 39 வருட சாதனையை முறியடித்த கே.எல் ராகுல் ஜெய்ஸ்வால் ஜோடி – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று லீட்ஸ் நகரில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்ததால் இந்திய அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

29 ஆண்டுகால சாதனையை முறியடித்த துவக்க ஜோடி :

அந்த வகையில் இன்றைய முதல்நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக கே.எல் ராகுல் 42 ரன்களையும், சாய் சுதர்சன் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். அதேவேளையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் 42 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி முன்னாள் துவக்க வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகியோரின் 29 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளது.

அந்த வகையில் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : கடந்த 1986 ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் அதாவது இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கி முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்திருந்தனர். அதுவே லீட்ஸ் மைதானத்தில் இந்திய துவக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் அதனை தகர்த்த ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் குவித்து அவர்களது சாதனையை முறியடித்துள்ளது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல் ராகுல் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் 42 ரன்கள் எடுத்து முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2021இல் இந்தியாவை கலாய்த்த மைக்கேல் வாகனுக்கு.. ட்வீட் பரிசளித்து முகத்தில் கரியை பூசிய புஜாரா

கடந்த சில ஆண்டுகளாகவே நிலையான இடம் இன்றி பேட்டிங் ஆர்டரில் மாற்றி மாற்றி களமிறக்கப்பட்டு வந்த கே.எல் ராகுலுக்கு ரோஹித் சர்மாவின் ஓய்வு காரணமாக துவக்க வீரருக்கான நிலையான இடம் கிடைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மேலும் பல ஆண்டுகள் அவரால் அந்த இடத்தில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -