கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் நிகழ்த்தப்போகும் சாதனை – விவரம் இதோ

Jadeja and KL Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது அக்டோபர் 10-ஆம் தேதி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் நிகழ்த்தப்போகும் சாதனை :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற இருக்கும் வேளையில் தற்போது இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்த போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றிற்காக காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் அவர்கள் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியிலே 104 ரன்கள் அடித்து அசத்தலாக இந்த தொடரை துவங்கியுள்ள வேளையில் அவர் இதுவரை ஒட்டுமொத்தமாக 86 போட்டிகளில் விளையாடி 38 ரன்கள் சராசரியுடன் 6 சதம் மற்றும் 27 அரைசதங்கள் என 3990 ரன்களை குவித்துள்ளார்.

எனவே மேலும் அவர் 10 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை அடித்து சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மட்டும் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இரண்டு சதம் மற்றும் ஐந்து அரை சதம் என 82 ரன்கள் சராசரியுடன் 659 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுல் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 ரன்கள் சராசரியுடன் 11 சதங்கள் மற்றும் 19 அரைசதம் என 3889 ரன்கள் குவித்திருக்கும் வேளையில் அவர் மேலும் 111 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் அவரும் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை தொட்டு சாதனை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : நன்றி மறந்த பிசிசிஐ.. இந்த அவமானத்தை செய்றதுக்கு முன் ரோஹித் போறதே நல்லது.. திவாரி ஆதங்கம்

அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 532 ரன்களை குவித்து அசத்திய அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement