இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2023 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் 11 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு சென்று அசத்தியது.
2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை அவருடைய தலைமையில் வென்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபியையும் முத்தமிட்டது. அதனால் 2027 உலகக் கோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்று பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.
அவமானப்படுத்திய பிசிசிஐ:
மறுபுறம் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா சாதாரண வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் 2027 உலகக் கோப்பையில் அவரும் விராட் கோலியும் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை நன்றி மறந்து கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்டுள்ளதாக முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.
எனவே அடுத்ததாக வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைத்து அவமானப்படுத்துவதற்கு முன் ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் ரோஹித் சர்மா தாமாக விடை பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு. “இனிமேலும் ரோஹித் சர்மா பிசிசிஐயின் வருங்காலத் திட்டத்தில் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றவில்லை”
இதுக்கு மேல என்ன இருக்கு:
“இனிமேல் அனைத்தும் செயல்திறனைப் பொறுத்து அமையும். ஒருவேளை நான் ரோஹித் சர்மாவாக இருந்தால் ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் ஓய்வு பெறுவதைப் பற்றி சிந்திப்பேன். ரோஹித் சர்மா போன்றவர் இப்படிப்பட்ட அவமானத்தைச் சந்திக்க தகுதியானவர் கிடையாது. ஏனெனில் அவர் ஒன்றுக்கு 2 ஐசிசி கோப்பை வென்று கொடுத்துள்ளார். 2023 உலகக் கோப்பையை அருகில் நெருங்கிய அவர் கேப்டன் மற்றும் வீரராக நன்றாகவே செயல்பட்டுள்ளார்”
இதையும் படிங்க: இதை செஞ்சா தான் ஒன்டே டீம்ல இடம் கிடைக்கும்ன்னு.. சொல்லி கம்பீர் கழற்றி விட்டாரு.. வருண் பேட்டி
“இதற்கிடையே அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றவர் என்பதை மறக்காதீர்கள். இவ்வளவு சாதனைகளை செய்த அவர் இப்படி நடத்தப்படும் விதம் சரியானதல்ல. தனிப்பட்ட முறையில் நானாக இருந்தால் இப்படி அவமரியாதை செய்த பின் தொடர்ச்சியாக விளையாட மாட்டேன். என்னைக் கேட்டால் அவர்கள் வெளியே தள்ளுவதற்கு முன் ரோஹித் தாமாகவே வெளியேறுவது நல்லது. அந்த வழியில் அவர் தன்னுடைய கௌரவத்தை விட்டு செல்வார்” என்று கூறினார்.



