ஐ.பி.எல் தொடரை தவறவிடுகிறாரா ? கே.எல்.ராகுல். ஹாஸ்பிடலில் அனுமதி – ஆபரேஷன் வேற பண்ணணுமாம் – வெளியான அதிர்ச்சி தகவல்

Rahul

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ராகுல் இந்த ஆண்டு அதிக ரன்கள் அடித்த ஐபிஎல் வீரர்களின் பட்டியலில் 331 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை தன் வசம் வைத்துள்ளார். கடைசியாக நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்து அசத்திய அவர் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ராகுல் விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ராகுல் நேற்று இரவு கடுமையான வயிற்று வலி காரணமாக அவதிப் பட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அணியில் உள்ள நிர்வாகத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு அப்பென்டிக்ஸ் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நிச்சயம் அவருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்ற காரணத்தினால் அவர் இனிவரும் சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆபரேஷனை முடித்த பிறகு மீண்டும் அணியுடன் இணைய வேண்டும் என்றால் விதிமுறையின் படி 7 நாட்கள் அவர் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்பதால் மேலும் சில போட்டிகளை அவர் தவறவிடுவார். கிட்டத்தட்ட அவர் இந்த சீசன் முழுவதுமே தவற விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்நிலையில் விரைவில் உடல் நலம் தேறி குணமாகி வரவேண்டும் என்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ராகுலின் இந்த நிலையை குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு உள்ளனர்.

- Advertisement -

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி ராகுலுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை தெரியவந்ததும் ரசிகர்கள் சற்று வருத்தம் அடைந்தனர். மேலும் அவர் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்றும் தங்களது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.