அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில் கே.எல் ராகுலின் ஆட்டம் மீதே எழுந்த விமர்சனம் – வெளிப்பட்ட ராகுலின் தவறு

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 195 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்தபடியாக கேப்டன் கேஎல் ராகுல் 57 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 18.2 ஒவர்களில் டெல்லி அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது.

stoinis

டெல்லி அணியில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 49 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என பஞ்சாப் அணியை பஞ்சு பஞ்சாக அடித்துப் பறக்க இதன் காரணமாக டெல்லி அணியால் மிக எளிதாக பஞ்சாப் நிர்ணயித்த இலக்கை அடைய முடிந்தது.
சென்ற ஐபிஎல் தொடரில் கூட கேஎல் ராகுல் மிகப் பொறுமையாக விளையாடிய ரன் குவிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

- Advertisement -

அவரது ஸ்ட்ரைக் ரேட் 110-120 இதற்கு மேல் தாண்ட வில்லை எனவும், ஆரஞ்சு கேப்பு காக மட்டுமே விளையாடி வருகிறார் என்றும் பல ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதே தவறை தற்பொழுது கேஎல் ராகுல் இந்த ஆண்டும் செய்து வருகிறார். நேற்றைய போட்டியில் கிட்டத்தட்ட 51 பந்துகளில் பிடித்து வெறும் 61 ரன்கள் மட்டுமே அடித்து பஞ்சாப் அணியை மிகப்பெரிய அளவில் ஏமாற்றினார்.

rahul 1

இவர் மட்டும் நேற்று அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயமாக 20-30 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க முடியும். அதன் காரணமாகவே நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. இதே தவறை மறுபடியும் கேஎல் ராகுல் தொடர்ந்து வருவதால், பஞ்சாப் நிர்வாகம் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

agarwal

இனி வரும் போட்டிகளில் தனிப்பட்ட வகையில் ரன்களைக் குவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அணிக்கு தேவைப்படும் ரன்களை கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement