கே.எல் ராகுலை டிரேடிங் முறையில் வாங்கி பதவியையும் வழங்க காத்திருக்கும் கே.கே.ஆர் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது முதல் முறையாக கோப்பை கைப்பற்றி அசத்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வரும் வேளையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

கே.எல் ராகுலை வாங்க முயற்சிக்கும் கே.கே.ஆர் :

மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளிலுமே சில மாற்றங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை மற்ற அணிகளிலிருந்து டிரேடிங் முறையில் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்தவகையில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை சி.எஸ்.கே அணி டிரேடிங் முறையில் வாங்க இருப்பதாகவும், அதேபோன்று இஷான் கிஷனை கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக வாங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு அதிகாரப்பூர்வ தகவலின் படி : இந்திய அணியின் நட்சத்திர வீரரும், டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான கே.எல் ராகுலை கே.கே.ஆர் அணி டிரேடிங் செய்ய விருப்பப்படுவதாக கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு வெளியேறியது.

- Advertisement -

அதனால் கொல்கத்தா அணி மீண்டும் தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் ஒரு நல்ல கேப்டனையும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனையும் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாக கே.எல் ராகுலை அந்த இடத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் கொல்கத்தா அணி அவருக்கு கேப்டன் பதயைவியும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இது நடந்துச்சுன்னா இதுக்கு மேலயும் கம்பீரை இந்திய ரசிகர்கள் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க.. ஆதர்டன் பேட்டி

அந்த வகையில் ஒருவேளை அவர் டெல்லி அணியில் இருந்து டிரேடிங் முறையில் கொல்கத்தா அணிக்கு கொண்டுவரப்பட்டால் அவரே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement