கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு – கொரோனாவால் ஐ.பி.எல் தொடரில் ஏற்பட்டுள்ள சிக்கல்

KKRvsRCB
- Advertisement -

இந்தியாவில் கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடர் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்து அணிகளுமே 7 போட்டிகளில் விளையாடி அடுத்த இரண்டாவது கட்டத்திற்கு நகர்ந்த நிலையில் இன்று நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 30வது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

RCBvsKKR

- Advertisement -

ஏனெனில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டிகள் அனைத்தும் சரியான திட்டமிடலுடன் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொரோனா தனது ஆட்டத்தை ஐபிஎல் அணிக்குள் காண்பித்துள்ளது.

இன்று நடைபெற இருந்த கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருக்கும் இரண்டு வீரர்கள் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இன்றைய கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் இந்த போட்டி நடைபெறுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

varun

அதன்படி தமிழக வீரரான வருன் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தா அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் கொரோனா வாய்ப்பிருந்தால் இந்த தொடர் நடைபெறுவதில் பெரிய சிக்கல் ஏற்படும்.

Varun

இதன் காரணமாக தற்போது ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மேலும் இனிவரும் போட்டிகள் சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வியும் இந்த தகவலின் மூலம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement