இரண்டு உலகத்தர அதிரடி வீரர்களை தூக்கி வீசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – விவரம் இதோ

Lynn
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பதிமூன்றாவது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

Ipl cup

- Advertisement -

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் மற்றும் வீரர்கள் மாற்றம் ஆகியவை தற்போது வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து வீரர்களை விடுவிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அனைத்து அணிகளும் தங்கள் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கும் வீரர்களின் பட்டியலை அறிவிக்கவேண்டும்.

இந்நிலையில் கொல்கத்தா அணியும் அவர்கள் விடுவிக்கும் வீரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கொல்கத்தா அணியில் இருந்து நட்சத்திர வீரர்களான கிறிஸ் லின், உத்தப்பா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஆகிய முக்கிய வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

lynn1

kkr

கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த அதிரடி துவக்க வீரர் லின் மற்றும் அந்த அணியின் நட்சத்திர வீரரான ராபின் உத்தப்பா ஆகியோர் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தாலும் புதிய அணியுடன் வலுவாக இந்த வருட ஐ.பி.எல் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement