பியூஸ் சாவ்லாவை சி.எஸ்.கே துரத்தி வாங்கியதற்கு காரணம் இதுதான் – விமர்சையாக கிண்டல் செய்த கொல்கத்தா அணி

Chawla
- Advertisement -

வரும் 2020ஆம் ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் அனைத்து அணி உரிமையாளர்கள் தங்களது அணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலம் எடுத்தனர்.

இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. மேலும் தங்கள் அணியின் புது வீரரை சிஎஸ்கே நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை கொண்டாடியது. இந்நிலையில் இந்த பதிவிற்கு கொல்கத்தா அணி நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கம் மூலமாக சாவ்லாவை கிண்டலாக ஒரு பதிவினை எட்டு கிண்டல் செய்துள்ளது.

- Advertisement -

இது ஒரு நகைச்சுவைக்காக இருந்தாலும் இந்த பதிவு ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது. ஏனெனில் சிஎஸ்கே ஏன் சாவ்லாவை ஏலத்தில் எடுத்தது என்று இப்பதிவில் கொல்கத்தா அணி குறிப்பிட்டதாவது : நீங்கள் ஏன் சாவ்லாவை ஏலத்தில் எடுத்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்று கிண்டலாக பதிவிட்ட கொல்கத்தா அணி அந்த வாசகத்தின் சாவ்லா தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது.

kkr

அதற்கு காரணம் யாதெனில் சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்கள் பெரும் பகுதி 30 வயதை கடந்தவர்கள். கடந்த ஆண்டே ரசிகர்களால் டாடிஸ் ஆர்மி என்று அழைக்கப்பட்ட சிஎஸ்கே அணியில் தற்போது மீண்டும் சாவ்லா இணைந்துள்ளதால் அவரும் அவருடைய குழந்தையும் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி டாடிஸ் ஆர்மி என்று கொல்கத்தா அணி மறைமுகமாக கிண்டல் செய்துள்ளது.

kkr 1

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே சாவ்லா ஒரு தவறான தேர்வு என்று ரசிகர்கள் நினைத்து வரும் நிலையில் கொல்கத்தா அணி கிண்டல் செய்த இந்த பதிவு அதிகஅளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement