இவரை தக்கவைக்காம தப்பு பண்ணிட்டோம். மெகா ஏலத்தில் KKR டார்கெட் செய்யும் முதல் வீரர் – இவர்தானாம்

KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஏலம் மெகா அளவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1214 வீரர்கள் போட்டி போட உள்ளார்கள். இந்த ஏலத்துக்கு முன்பாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பிய வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர்கள் மற்றும் சம்பளம் போன்ற விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

kkr

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வெஸ்ட்இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் (12 கோடிகள்), தமிழகத்தை சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி (8 கோடிகள்), இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் (8 ஐயர்), வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் (6 கோடிகள்) ஆகிய 4 வீரர்களை அதிகபட்சமாக தக்க வைத்து கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த சீசன்களில் கேப்டனாக இருந்த இயன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்காதது ஆச்சரியத்தை அளித்தது.

ஆனால் அந்த அணிக்காக விளையாடி வந்த நம்பிக்கை நட்சத்திர இளம் வீரர் சுப்மன் கில் தக்க வைக்கபடாதது அதைவிட பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்தியாவின் வளர்ந்து வரும் வீரராக கருதப்படும் அவர் கடந்த 3 சீசன்களாக அந்த அணிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார்.

gill

மிஸ் பண்ணிட்டோம்:
இந்நிலையில் சுப்மன் கில்லை தக்கவைக்காமல் தவறவிட்டு விட்டோம் என கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது, “மெகா ஏலத்தில் நிறைய வீரர்களை இழக்க நேரிடும் என்பதால் திட்டமிட வேண்டியிருந்தது. இருப்பினும் ஏலத்தில் சுப்மன் கில்லை இழந்தது மிகப்பெரிய ஏமாற்றமாகும்.

- Advertisement -

ஆனால் சில நேரங்களில் அது தானே வாழ்க்கை. நடைபெற உள்ள ஏலத்தில் சிறப்பாக செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக சுப்மன் கில் ரூபாய் 1.8 கோடிகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

gill 1

அந்த அணிக்காக 58 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1214 ரன்களை 123 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்துள்ளார். குறிப்பாக 2019 ஐபிஎல் சீசனில் அபாரமாக ரன்களை குவித்த அவர் “2019 வருடத்திற்கான வளர்ந்து வரும் வீரர்” என்ற விருதையும் வென்றுள்ளார். தற்போது இவரை புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அகமதாபாத் கிரிக்கெட் அணி 8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

4 வீரர்கள் :
இயன் மோர்கன், தினேஷ் கார்த்திக் போன்ற கேப்டன் வீரர்களை கூட தக்கவைக்காமல் 4 இதர வீரர்களை தக்க வைத்துள்ள காரணம் பற்றி பிரெண்டன் மெக்கலம் பேசுகையில், “கடந்த தசாப்தங்களில் ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தங்களை மேட்ச் வின்னர்களாக நிரூபித்துள்ளார்கள். அதேபோல் கடந்த 2 சீசன்களில் வருண் சக்ரவர்த்தி எந்த அளவுக்கு செயல்பட்டார் என நாம் பார்த்தோம்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே பிளேயிங் லெவனில் 8 ஆவது இடம் வழங்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் – ஜடேஜாவின் செம ரிப்ளை

வெங்கடேஷ் ஐயர் கடந்த சீசனில் பிற்பகுதியில் அபாரமாக செயல்பட்டவர். அதே சமயம் பேட் கமின்ஸ் சிறப்பாக செயல்படாததால் அவரை விடுவித்துள்ளோம் என கூறினால் அதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவரை ஏலத்தில் மீண்டும் வாங்க கடினமாக முயற்சிக்க உள்ளோம்” என கூறியுள்ளார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மீதி கையிருப்பு உள்ள 48 கோடிகளுடன் கொல்கத்தா அணி நிர்வாகம் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement